
அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் எப்படிப் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து ஒரு காணொலித் தொடர் 2022ஆம் ஆண்டு வெளியாகியது. பல பரிமாணங்களில் வெளியான பாடல்களை ஏழு பாகங்களாக, “Activism in Tamil Cinema Music” – தமிழ்த் திரைப் பாடல்களில் எழுச்சிப் போக்குகள் என்ற தலைப்பில் திரை இசை குறித்த ஒரு கலைக்களஞ்சியம் என்று அறியப்படும் சுபஶ்ரீ தணிகாசலம் அவர்களுடன் இணைந்து, தொகுத்து, வெளியிட்டுள்ள, திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், பேராசிரியர் என்று பன்முகம் கொண்ட K. ஹரிஹரன் அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.