
Hosted by SBS · TA

Police officers have a range of operational powers they can exercise under legislation, including to ask questions, give ‘move on’ directions and conduct searches. Here’s what you need to know about your basic rights and obligations in a police interaction. - நீங்கள் காவல்துறையினரால் ஒரு பொது இடத்தில் நிறுத்தப்படும்போது அல்லது வாகனம் ஓட்டும்போது தடுத்து நிறுத்தப்படும் சந்தர்ப்பங்களில், உங்களுக்கு இருக்கும் உரிமைகளையும் கடமைகளையும் அறிந்துகொள்வது, உங்கள் சட்ட உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள உதவும். இதுதொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்

Superannuation என்பது நம்முடைய எதிர்காலத்திற்காக சேமிக்கும் முக்கியமான தொகை. ஆனால், ஒருவர் உயிரிழந்த பிறகு அந்தப் பணம் யாருக்குச் செல்லும் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். இதுதொடர்பான Binding Death Benefit Nomination மற்றும் அதன் விதிமுறைகள் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.

Pink Sari Inc என்பது ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற தெற்காசியப் பின்னணியைச் சேர்ந்த புற்றுநோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கும் ஒரு சமூக அமைப்பு. தெற்காசிய மக்களுக்கான தனது சேவையில் பத்து ஆண்டுகளை கொண்டாடும் Pink Sari Inc அமைப்பு குறித்த விவரணம். இந்த சிறப்பு நிகழ்ச்சியில், Pink Sari அமைப்பின் தலைவர் சாந்தா விஸ்வநாதன், துணைத் தலைவர் Dr ருக்மணி வெங்கட்ராமன், Public Officer விஜய் தயானந்தன், மற்றும் Media and Communications Officer ரூபா பார்த்தசாரதி ஆகியோர் தமது அமைப்பின் பத்து ஆண்டுப் பயணம், சாதனைகள் மற்றும் சமூக சேவையை தொடர்ந்து முன்னெடுக்க அவர்களைத் தூண்டும் அர்ப்பணிப்பு குறித்து பகிர்ந்து கொள்கிறார்கள். விவரணத்தை படைப்பவர்: றைசெல்.Pink Sari Inc, a community organisation supporting South Asian cancer patients and their families, is celebrating its 10th anniversary. Since becoming a community-led organisation in 2016, it has promoted cancer awareness, early detection and culturally appropriate support. In this feature, President Shantha Viswanathan, Vice President Dr Rugmani Venkatraman, Public Officer Viji Thayananthan and Media and Communications Officer Rupa Parthasarathy reflect on Pink Sari’s journey, achievements and the passion behind their work.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 14/08/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை; இலங்கையின் நீதித்துறை சீர்திருத்தங்களை உள்ளடக்கிய 22வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.Top news from Sri Lanka this week (9 - 14 August)

வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு உதவும்வகையில் 250 டாலர்களுக்கு புதிய Washing Machine-சலவை இயந்திரத்தை வழங்கும் திட்டத்தின் புதிய சுற்று தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

நம்மில் பலர் தோள்மூட்டு வலியை அனுபவித்திருப்போம் அல்லது அனுபவித்துக் கொண்டிருப்போம். இது ஏற்படுவதற்கான காரணம் என்ன? இதை எப்படித் தவிர்க்கலாம் என்பது பற்றி விளக்கமளிக்கிறார் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் கனகரட்ணம் காண்டீபன் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலிய தேசத்தில் வாழ வந்த ஐரோப்பியர்கள் தங்களுடைய வசதிக்காக இங்கு அறிமுகப்படுத்திய அயல் மண்ணின் உயிரினங்களும் தாவரங்களும் அநேகம். ஆடு மாடு, குதிரை,கழுதை, எருமை, ஒட்டகம், நரி, நாய், பூனை, எலி, பன்றி, மான், முயல், மைனா, எறும்பு, தவளை என பலவித உயிரினங்களும், லாண்டானா, மதீரா, பிட்டூ, ரப்பர் கொடி போன்ற தாவரவினங்களும் என்று அந்த பட்டியல் நீள்கிறது. இந்த தகவலையும், அந்த தகவலின் பின்னாலிருக்கும் அவலங்களையும் சோகங்களையும் “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள்.Not a native species: How Australia ended up with the world's largest wild camel population

நாம் ஓட்டும் வாகனத்தின் மதிப்பு ஆண்டுதோறும் குறைந்தாலும், இன்சூரன்ஸ் பிரிமியம் மட்டும் ஏன் தொடர்ந்து உயர்கிறது? நீண்டகாலமாக ஒரே இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு உண்மையில் சலுகை கிடைக்கிறதா? கார் இன்சூரன்ஸ் கட்டண உயர்வின் காரணங்களை ஆராயும் செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றைசெல்.Why are car insurance premiums rising so much? Do long-term customers get a better deal?

புகழ் பெற்ற பத்மஸ்ரீ , நிருத்திய சூடாமணி, கலைமாமணி தமிழிசை பரதநாட்டிய கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜ் அவர்கள் தான் நடராஜாக பிறந்திருந்தாலும் தன்னுள் இருந்த பெண்மையை உணர்ந்து அதனை நாட்டிய கலையாக வடிகால் செய்து இன்று உலகம் போற்றும் தனித்துவமான தஞ்சாவூர் பாணி பரதநாட்டியத்திலும் தமிழிசை நடனத்திலும் புகழ் பெற்று திகழ்கிறார். அவர் தான் எதிர்கொண்ட பிரச்சனைகள், தடைகள், சவால்கள் முதலியவற்றை மனம் திறந்து நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார். அவரோடு உரையாடியவர் செல்வி இன்பசேகரன். இந்நிகழ்ச்சி ஒரு மறுஒலிபரப்பு.Nataraj became Narthaki and acheived in Bharathanatyam