
Hosted by SBS · TA

நாம் ஓட்டும் வாகனத்தின் மதிப்பு ஆண்டுதோறும் குறைந்தாலும், இன்சூரன்ஸ் பிரிமியம் மட்டும் ஏன் தொடர்ந்து உயர்கிறது? நீண்டகாலமாக ஒரே இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு உண்மையில் சலுகை கிடைக்கிறதா? கார் இன்சூரன்ஸ் கட்டண உயர்வின் காரணங்களை ஆராயும் செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றைசெல்.Why are car insurance premiums rising so much? Do long-term customers get a better deal?

புகழ் பெற்ற பத்மஸ்ரீ , நிருத்திய சூடாமணி, கலைமாமணி தமிழிசை பரதநாட்டிய கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜ் அவர்கள் தான் நடராஜாக பிறந்திருந்தாலும் தன்னுள் இருந்த பெண்மையை உணர்ந்து அதனை நாட்டிய கலையாக வடிகால் செய்து இன்று உலகம் போற்றும் தனித்துவமான தஞ்சாவூர் பாணி பரதநாட்டியத்திலும் தமிழிசை நடனத்திலும் புகழ் பெற்று திகழ்கிறார். அவர் தான் எதிர்கொண்ட பிரச்சனைகள், தடைகள், சவால்கள் முதலியவற்றை மனம் திறந்து நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார். அவரோடு உரையாடியவர் செல்வி இன்பசேகரன். இந்நிகழ்ச்சி ஒரு மறுஒலிபரப்பு.Nataraj became Narthaki and acheived in Bharathanatyam

கிட்டத்தட்ட 10 லட்சம் ஆஸ்திரேலியர்கள், Medicare-ரிட மிருந்து கிடைக்க வேண்டிய $274.5 மில்லியன்களை இன்னும் பெறாமல் உள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலியாவின் உணவு டெலிவரி பணியாளர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை Fair Work Commission அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிதா ஜீவா அவர்கள் மிகவும் பிரபலமான Podcaster மற்றும் YouTuber. பொறியாளரான இவர், தனது பிரபலமான கதை போட்காஸ்ட் (Kadhai Podcast) மூலம் தமிழ் கதை சொல்லியாக டிஜிட்டல் உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். தமிழ் இலக்கியம், வரலாறு மற்றும் பல்வேறு வகையான கதைகளை மையமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான Podcast-களை வெளியிட்டுள்ள கவிதா, தமிழ் கதை சொல்லும் மரபை புதிய தலைமுறை டிஜிட்டல் நேயர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ள கவிதா அவர்களை SBS சிட்னி ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் – பாகம் 2.Kavitha Jeeva from Tamil Nadu is a popular podcaster and YouTuber. An engineer by profession, she has carved out a unique place in the digital world as a Tamil storyteller through her popular Kadhai Podcast. With hundreds of podcast episodes covering Tamil literature, history and a wide range of stories, Kavitha is bringing the rich tradition of Tamil storytelling to a new generation of digital listeners. During her visit to Australia, Kavitha joined RaySel at the SBS studios in Sydney for a conversation about her storytelling journey. Interview part 2 (final).

தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிதா ஜீவா அவர்கள் மிகவும் பிரபலமான Podcaster மற்றும் YouTuber. பொறியாளரான இவர், தனது பிரபலமான கதை போட்காஸ்ட் (Kadhai Podcast) மூலம் தமிழ் கதை சொல்லியாக டிஜிட்டல் உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். தமிழ் இலக்கியம், வரலாறு மற்றும் பல்வேறு வகையான கதைகளை மையமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான Podcast-களை வெளியிட்டுள்ள கவிதா, தமிழ் கதை சொல்லும் மரபை புதிய தலைமுறை டிஜிட்டல் நேயர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ள கவிதா அவர்களை SBS சிட்னி ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் – பாகம் 1.Kavitha Jeeva from Tamil Nadu is a popular podcaster and YouTuber. An engineer by profession, she has carved out a unique place in the digital world as a Tamil storyteller through her popular Kadhai Podcast. With hundreds of podcast episodes covering Tamil literature, history and a wide range of stories, Kavitha is bringing the rich tradition of Tamil storytelling to a new generation of digital listeners. During her visit to Australia, Kavitha joined RaySel at the SBS studios in Sydney for a conversation about her storytelling journey. Interview part - 1

Teenagers in Australia can undertake paid work under certain restrictions, with general employment rights also protecting young workers. Here’s what you need to know as a parent or guardian of a worker under 18. - ஆஸ்திரேலியாவில், 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் குறிப்பிட்ட நிபந்தனைகளில் சம்பள வேலை செய்யலாம். வேலை செய்யும் இடங்களில் உங்கள் பிள்ளை நியாயமாக நடத்தப்படுவதையும், அவர்களின் முதல் வேலை அனுபவம் சிறப்பாக அமையவும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விடயங்களைப் இந்த விவரணத்தில் பார்க்கலாம். இதனை ஆங்கிலத்தில் தயாரித்தவர் Zoe Thomaidou, தமிழில் தருகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 12/08/2026) செய்திகள். வாசித்தவர் : சரண்யா பாலகிருஷ்ணன்Today's highlights ( 12 August 2026 - Wednesday)

இலங்கையில் கடந்த ஐந்து வாரங்களில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல்களில் 10 சிறை அதிகாரிகள் உட்பட 36 பேர் உயிரிழந்துள்ளதுடன், 163 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.Why are Sri Lanka's prisons exploding in violence?

ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.