
ஆஸ்திரேலியா முழுவதும், ஒரே ஓர் இரவில், வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, ஒவ்வொரு மனிதரும் – பச்சிளங்குழந்தை முதல் முதியவர் வரை - கணக்கிடப்படுவார்கள். இது வெறுமனே, ஃபெடரல் அரசு நிரப்பச் சொல்லும் ஒரு படிவம் அல்ல. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நமது பாடசாலைகள் எங்கே கட்டப்படும், மருத்துவமனைகளுக்கு எவ்வளவு நிதி செலவழிக்கப்படும், நமது தாய்மொழிச் சேவைகள் தொடருமா என்பதையெல்லாம் தீர்மானிக்கப் போவது இந்த ஒரே ஒரு படிவம்தான். ஒரு வரியில் சொன்னால் - நீங்கள் கணக்கில் பங்கேற்றால்தான், நமது தமிழ்ச் சமூகமும் கணக்கில் வரும். 2026 ஆஸ்திரேலிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்த அனைத்து செய்திகளையும் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.