
நடிகர், இயக்குநர், வசன கர்த்தா,இசையமைப்பாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட பாக்யராஜ் அவர்கள் தனது 73வது வயதில் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் மறைந்த முதுபெரும் இயக்குநர் பாரதிராஜாவின் சீடராக இருந்த பாக்யராஜ், பாரதி ராஜாவின் இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குநராக தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து இயக்குநர் என்பதையும் கடந்து நடிகராகவும் தனி முத்திரை பதித்தவர் பாக்யராஜ். அவர் SBS தமிழ் ஒலிபரப்பிற்கு 2014ம் ஆண்டு வழங்கிய நேர்முகத்தின் நிறைவுப் பாகம் இது. அவரோடு உரையவர் றேனுகா துரைசிங்கம்.
Loading summary