
வீடு மாறுவது என்பது பல வாடகைதாரர்களுக்கு ஒரு பெரிய தலைவலி — குறிப்பாக, பழைய வீட்டின் ஒப்பந்த முன்கட்டணம் (bond) தொகை திரும்பி வருவதற்கு முன்பே, புதிய வீட்டுக்கு இன்னொரு ஒப்பந்த முன்கட்டணம் (bond) தொகையைக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இந்த நிலையை மாற்றும் ஒரு புதிய திட்டம் இந்த வாரம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.